#Jallikattu- போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும்- முதல்வர்

நாளை காலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் நிறைவேற்றுவதற்கான கோரிக்கையை வைக்க உள்ளார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். 

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், 'ஜல்லிக்கட்டு தொடர்பாக மக்கள் நடத்தும் உணர்வுபூர்வமான போராட்டத்தை மதிக்கிறேன். போராட்டக் குழுவினருடன் சந்தித்து பேசினேன். ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி நாளை பிரதமரை சந்திக்க உள்ளேன். அதுவரை போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும்.' என்று தெரிவித்தார்.

முதல்வர் டெல்லிக்கு புறப்படும் முன், மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் சிலரை சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார். முதல்வர் பன்னீர் செல்வம் அழைத்ததின் பேரில், அவரைச் சந்திக்க சென்றுள்ளனர் போராட்டக் குழுவினர். சந்திப்புக்குப் பிறகு போராட்டக் குழுவினர், 'பிரதமருடன் முதல்வர் சந்தித்து, அவசரச் சட்டம் நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் வரை போராட்டம் தொடரும்.' என தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!