மதுரை ஆதீனம்: நித்யானந்தா நியமனத்தை எதிர்த்து வழக்கு!

மதுரை: மதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து,உயர்நீதிமன்ற  மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை ஆதீனத்துக்கு நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை கண்டித்து மற்ற ஆதீன கர்த்தர்கள்  சேர்ந்து நேற்று கூட்டம் ஒன்றை நடத்தினர்.

அதில்,இன்னும் பத்து தினங்களுக்குள் நித்தியானந்தா நியமனம் குறித்து மறுபரிசீலனை   செய்ய வேண்டும் என்று அவர்கள் மதுரை ஆதீனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

மேலும்,10 நாட்களுக்குள் இந்த நியமனத்தை திரும்ப பெறாவிட்டால்  சட்டபடி  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் மதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து,இந்து மக்கள்  கட்சித் தலைவர் சோபலைக்கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு  தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்,”மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள நித்யானந்தா,தற்போது  ஆதீனமாக உள்ளவரை போதையிலேயே வைத்துள்ளார்.

அத்துடன் நித்யானந்தா மீது கர்நாடகா நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலவையில்  இருப்பதால், நித்யானந்தாவின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” எனக்  கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!