வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (19/01/2017)

கடைசி தொடர்பு:14:23 (19/01/2017)

#Jallikattu- மத்திய அரசுக்கு, எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் கெடு!

Lakshmi Saravankumar

2016-ம் ஆண்டில் தனது 'கானகன்' நாவலுக்காக சாகித்ய அகாடமியின் 'யுவ புரஸ்கார்' விருதை வாங்கியவர் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார். ஜல்லிக்கட்டுக்கு நிலவிவரும் தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்துவரும் நிலையில், 'இன்று மாலைக்குள் ஜல்லிக்கட்டு தொடர்பாக சாதகமான முடிவு வராத நிலையில், சாகித்ய அகாடமி அளித்த விருதை திருப்பி கொடுத்துவிடுவேன்' என்று கூறியுள்ளார். 

அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், 'ஜல்லிக்கட்டை நடத்த உடனே அனுமதியளிக்க அவசர சட்டம் இயற்றவும், AwBI மற்றும் பீட்டாவை தடை செய்யவும் வலியுறுத்துவதோடு வஞ்சிக்கப்பட்ட எம் விவசாயிகளுக்கான நலனை உடனே மத்திய அரசு கவனத்தில் எடுக்க வேண்டுமென்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். இந்த பெருந்திரளான சமூக எழுச்சியில், கூட்டத்தில் ஒருவனாகவே என்னையும் உணர்கிறேன். ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று மாலைக்குள் இணக்கமான எமக்கு சாதகமான ஒரு பதில் கிடைக்காத பட்சத்தில் சாகித்ய அகதெமியிலிருந்து வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதை நாளை காலை பதினோறு மணிக்கு சென்னையில் இருக்கும் சாகித்ய அகதெமி அலுவலகத்தில் திரும்பத் தந்துவிடுவேன். இந்த மாபெரும் போராட்டம் அடுத்த தலைமுறையிடமிருந்து நல்ல தலைவர்களை உருவாக்கும் என்கிற சின்னதொரு நம்பிக்கை இருக்கிறது. அது வெற்றிகரமாக நடக்கட்டும்' என்று பதிவிட்டிருக்கிறார் லஷ்மி சரவணகுமார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க