ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் - முதல்வர் பன்னீர்செல்வம்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ' ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, மிருகவதை தடை சட்டத்தில், மாநிலம் அளவில் திருத்தம் செய்யப்பட்டு, வரைவு அவசர சட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த வரைவு சட்டம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, குடியரசுத் தலைவர், பிரதமரிடம் ஒப்புதல் பெற்று இந்த சட்டம் பிறப்பிக்கப்படும். மேலும், ஓரிரு நாட்களில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும்.

O.Panneerselvam

இதனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!