'PT, MMS, R3...இதுதான் சுப்ரமணியன் சுவாமியின் ட்விட்டர் டிக்‌ஷ்னரி!

சுப்ரமணியன் சுவாமி

பா.ஜ.க., எம்.பி.யாகவே இருந்தாலும் கூட, எப்போதும் தனது கட்சியின் செயல்பாடுகளால் இல்லாமல், தனது 'தனிப்பட்ட கருத்துக்களாலேயே' அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருப்பவர் சுப்ரமணியன் சுவாமி. தற்போது தமிழர்களைப் பற்றி இவர் வெளியிடும் ட்வீட்கள் ஒவ்வொன்றும், தமிழக பா.ஜ.க.,வினர் மத்தியிலேயே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. 

அதுவும் ஜல்லிக்கட்டுக்காக போராடிவரும் தமிழர்கள் குறித்து இவர் ட்விட்டரில் வெளியிடும் ஒவ்வொரு ட்வீட்டும் இளைஞர்கள் மத்தியில் கோபத்தை கிளப்ப,மெரினாவில் கூட, இவருக்கு எதிராக கோஷங்கள் ஒலிக்கின்றன. இவர் பக்கங்களில் இருக்கும் 'பொறுக்கி' ட்வீட்களால் தற்போது மீண்டும், பரபரப்பாகியுள்ளது சுவாமின் ட்விட்டர் பக்கம். ஆனால் பல சமயங்களில் இவர் ட்விட்டரில் பயன்படுத்தும், சில வார்த்தைகளுக்கு ட்வீப்பிள்களுக்கே பல நேரங்களில் அர்த்தம் புரிவதில்லை. 

ரகுராம் ராஜன், சோனியா காந்தி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் என நபர்களின் பெயர்களை ட்விட்டரில் பயன்படுத்தும் போது, ஒவ்வொருவரையும் நேரடியாக குறிப்பிடமால், வெவ்வேறு விதங்களில் குறிப்பிடுவது சுவாமியின் ஸ்டைல். அதே போல PT, DD, MMS, MK, JJ என இவர் குறிப்படும் எழுத்துக்களின் விரிவாக்கம் அவரைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு மட்டுமே புரியும். இப்படி சுப்ரமணியன் சுவாமி குறிப்பிடும், வார்த்தைகளின் விளக்கத்தை பிரபல கேள்வி பதில் தளமான குவோரா தளத்தில் கூட பதில்கள் உள்ளன.

அப்படி பயன்படுத்தும் வார்த்தைகளில் சில...

தற்போது தமிழர்களை மோசமான வார்த்தைகளால் இழிவு செய்யும் சுவாமி அது தொடர்பான ட்வீட்களில் PT என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். இதற்கு அர்த்தம், Patriotic Tweeple. இதில் ட்வீப்பிள் என்பது ட்விட்டர் பயன்படுத்துபவர்களைக் குறிக்கும் சொல்.
ரகுராம் ராஜன் என்ற பெயரில் இருந்த, R எழுத்துக்களைக் கொண்டு, அவரை R3 எனக் குறிப்பிட்டிருந்தார். DD எனக் குறிப்பிடுவதற்கு அர்த்தம் Dravidian Draculas. JJ என்றால் ஜெயலலிதா. MK என்றால் கருணாநிதி. 

MMS என்றால் மன்மோகன் சிங். இவை அனைத்தையும் விட, அவர் சிலரை தாக்கி பயன்படுத்தும் சொற்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எதிர்க்கத்தக்கவை.

PC என்றால் Papa Chor அல்லது Pontificating Crook. இந்த பெயரால், முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரைக் குறிப்பிட்டும்,  BC - Baby Chor என அவரது மகனையும் குறிப்பிட்டும் ட்வீட் செய்திருக்கிறார்.

விஷ்கன்யா, டடகா, Shree 420, Aaptards என்னும் பெயர்களால் மற்ற கட்சித் தலைவர்களையும் வசைபாடி வருகிறார். 

- ஞா.சுதாகர்.

 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!