வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (22/01/2017)

கடைசி தொடர்பு:12:46 (22/01/2017)

’மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு’ : ஓ.பி.எஸ்

O Paneerselvam

’மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தி கொள்ளலாம். யாராலும் ஜல்லிக்கட்டை தடுக்க முடியாது’, என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

'முதற்கட்டமாக பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அரசு கொண்டு வந்துள்ள சட்டம் நீடித்த நிலையான சட்டம். மக்கள் விரும்பும் போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

அவசரச் சட்டம் நாளை கூடும் சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவாக தாக்கல் செய்யப்படும். தமிழக அரசு எடுக்கும் சட்டத்துக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்’, என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க