வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (23/01/2017)

கடைசி தொடர்பு:12:58 (23/01/2017)

ஜல்லிக்கட்டு தொடர்பாக 70 கேவியட் மனுக்கள்!

Jallikattu

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தரச் சட்டம் கொண்டு வரக் கோரி நடந்து வந்த போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு வரும் நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 70 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கேவியட் மனு தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 69 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மற்றொரு புறம், தொடக்கம் முதலே ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த மேனகா காந்தி, ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க