'அத்துமீறியது சமூக விரோதிகளே' - கமிஷனர் ஜார்ஜ்

george

சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதில், 'இன்று காலை போராட்ட களத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகள் பொறுமையாக பேசி மாணவர்களை கலந்து போகச் சொல்லினர். மக்களை அமைதியாக கலைக்கவே விரும்பினோம். ஆனால், கூட்டத்தில் உள்ள ஒரு பகுதியினர் இதை எதிர்த்தனர்.

சமூக விரோதிகள் சிலர் கூட்டத்துக்குள் நுழைந்ததே பிரச்னைக்கு காரணம். அவர்கள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டக்குழுவில் சிலர் அச்சுறுத்தல் விடுப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தன. சமூக விரோத சக்திகள் உள்ளே புகுந்ததால் நடவடிக்கை எடுக்க நேரிட்டது.

40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சோஷியல் மீடியாவில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகரில் காவல்துறையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. சென்னையில் 7000 காவலர்கள், 1000 துணை ஆய்வாளர்களும் கண்காணிப்பு பணியில் உள்ளனர். சென்னையில் நாளை காலை இயல்பு நிலை திரும்பும் ' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!