வெளியிடப்பட்ட நேரம்: 04:06 (24/01/2017)

கடைசி தொடர்பு:11:45 (24/01/2017)

சென்னையில் அதிரடிப்படைபோலீஸார் குவிப்பு!

சென்னையின் பல்வேறு இடங்களிலும், காவல்துறையினர் குவிக்கப்பட்டு ஒரு  அசாதாரண சூழல் தென்படுகிறது.  சென்னையின் முக்கிய பகுதிகளான  மெரினா விவேகானந்தர் இல்லம், ஹேமில்டன் பிரிட்ஜ், வடபழனி, பட்டினப்பாக்கம்,  அவ்வை சண்முகம் சாலை, எல்டாம்ஸ் ரோடு, மவுன்ட்ரோடு, திருவல்லிக்கேணி பாரதி சாலை  ஆகியவற்றில்  தமிழக அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, நகரின் அனைத்து புறநகர்ப்பகுதிகளிலும்  ரோந்து போலீஸார் கண்காணிப்பில் தொடர்ச்சியாக ஈடுபட்டு உள்ளனர்.  அதிரடிப்படை போலீஸாரிடம் வன்முறையை எதிர்கொள்ளும் வண்ணம் லத்திகம்புகள், தடுப்புவளையங்கள் தயார்நிலையில் வைத்து உள்ளார்கள்.

படம்: பா.காளிமுத்து

நீங்க எப்படி பீல் பண்றீங்க