'பீட்டா'வுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

பீ்ட்டா அமைப்புக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு காணக்கோரியும், பீட்டா அமைப்பைத் தடை செய்யக்கோரியும் தமிழகத்தில் போராட்டம் பரவிய நிலையில், சென்னை மெரினாவில் மாணவர்கள், இளைஞர்கள் குவிந்து அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் எதிரொலியாக தமிழக அரசு நேற்று அவசரச் சட்டம் கொண்டு வந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.

இந்த நிலையில், பீட்டா அமைப்பைத் தடை செய்யக்கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மேலும், தமிழ் கலாசாரத்துக்கு எதிராக பேசி வரும் ராதாராஜன், சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையிட்டிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதி மகாதேவன், முறைப்படி வழக்காக தொடர்ந்தால் நாளை விசாரிக்கிறேன் என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!