வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (24/01/2017)

கடைசி தொடர்பு:18:02 (24/01/2017)

ஜல்லிக்கட்டு இளைஞர்கள் இனி அரசியலில்!

ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களை அரசியலில் களமிறக்க ஆவடியில் இளைஞர்கள் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களை அரசியல் பயணத்தில் அழைத்துச் செல்ல ஆவடி இளைஞர்கள் ஒருங்கிணைப்பு என்ற குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து குழுவின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜாமணி கூறுகையில், "இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காகவே இந்த குழுவை ஏற்படுத்தி உள்ளோம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் ஒற்றுமையாக போராடியதால் வெற்றி கிடைத்தது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஆவடி பெருநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் இளைஞர்களை களமிறக்க முடிவு செய்துள்ளோம். தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் கட்டாயம் டிகிரி முடித்திருப்பதோடு, சமூக சேவையிலும் ஈடுபட்டு இருக்க வேண்டும். முதற்கட்டமாக காளையுடன் கூடிய கொடியை வடிவமைத்துள்ளோம்" என்றார்.

- எஸ்.மகேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க