வெளியிடப்பட்ட நேரம்: 22:41 (24/01/2017)

கடைசி தொடர்பு:10:47 (25/01/2017)

ஐஸ் அவுஸ் பகுதிகளில் காவல்துறை அத்துமீறல்!

Police Ice House

சென்னை ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்துக்கு நேற்று தீ வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வன்முறை வெடித்ததால், சென்னையின் பல இடங்களில் போலீஸார் வீடு, வீடாகச் சென்று கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது, ஐஸ் ஹவுஸில் போலீஸார் வீடு, வீடாகச் சென்று கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடுக்குப்பம், சிவாராஜபுரம், மாட்டாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  இதன் காரணமாக அந்த பகுதி ஆண்கள் தலைமறைவாகியுள்ளனர். இரவு நேரத்தில் போலீஸின் இந்த நடவடிக்கையால் ஐஸ் ஹவுஸ் பகுதி பெண்கள், குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக அந்த வழியாக சாலையில் செல்வோர்களையும் காவல்துறை விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது.  இதனால் அந்தப் பகுதி மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க