வெளியிடப்பட்ட நேரம்: 02:06 (25/01/2017)

கடைசி தொடர்பு:18:30 (25/01/2017)

நீதி விசாரணை வேண்டும்! - அன்புமணி

தமிழகத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதற்கும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கும் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அன்புமணி


மேலும், இதுபற்றி அவர் கூறுகையில், 'தமிழ்நாடு முழுவதும் அமைதியாக நடந்த மாணவர் போராட்டத்துக்கு களங்கம் ஏற்படுத்த காவல் துறையினர் திட்டமிட்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். சென்னையில் நடந்த கலவரத்துக்கு காவல் துறை தான் காரணம். காவல் துறையினரே ஆட்டோ, குடிசை, வாகனங்களைக் கொளுத்தும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. கலவரம் தொடர்பாக ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் அல்லது சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியாகும். அதற்காக பா.ம.க நீதிமன்றம் செல்லவும் தயார். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தடையேதும் இல்லாமல் ஆண்டுதோறும் நடத்த உரிய சட்டம் கொண்டுவரவேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளேன்' எனத் தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க