வெளியிடப்பட்ட நேரம்: 04:49 (25/01/2017)

கடைசி தொடர்பு:18:30 (25/01/2017)

மெரினா வன்முறை கள ஆய்வு அறிக்கை - அ.மார்க்ஸ் வெளியிடுகிறார்

மெரினாவில் இளைஞர்களை அப்புறப்படுத்திய பிறகு நடந்த கலவரத்தின் பின்னணி குறித்த கள ஆய்வு இடைக்கால அறிக்கையை பேராசிரியர் அ.மார்க்ஸ் இன்று வெளியிடுகிறார். 

மெரினா கடற்கரையில் ஏழு நாட்களாக ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் வலுக்கட்டாயமாகப் போலீசார் அப்புறப்படுத்தினர். அதையடுத்து போலீசார் நடத்திய தாக்குதல்களில் இளைஞர்கள் பலரின் மண்டை உடைந்தது. கால்கள் உடைக்கப்பட்டன. காவல் நிலையத்துக்கும் தீவைக்கப்பட்டது. நடுக்குப்பம், கிருஷ்ணாம்பேட்டை, வி.ஆர்.பிள்ளை தெரு போன்ற பகுதிகளில் ஆட்டோக்கள், கார்கள் கொளுத்தப்பட்டன. வீடுபுகுந்து பொதுமக்களை அடித்து உதைத்தனர். இதனால், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அசாதாரண நிலை உருவாகியிருக்கிறது. இது பற்றிப் பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதுகுறித்த இடைக்கால அறிக்கையை 25-ம் தேதி வெளியிடுகிறார்கள். 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க