விஜயகாந்த் மதுரை வரும் நிலையில் தேமுதிக செயலாளர் வீட்டில் குண்டுவீச்சு!

Vijayakanth

தொண்டர்களை சந்திக்க தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று மதுரைக்கு வர உள்ள நிலையில், மாவட்ட துணைச் செயலாளர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுவீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை நாராயணபுரத்தில் தே.மு.தி.க தெற்கு மாவட்ட துணைச் செயலாளரும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டவருமான தனபாண்டியன் வீட்டு முன் நிறுத்திய கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மதுரைக்கு வரும்போது, மதுரையில் உள்ள கட்சியின் முக்கிய பிரமுகர் வீட்டுக்கு முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செ.சல்மான்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!