ப.சிதம்பரத்துக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு தடை!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மனைவி, மகனுக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

2009-10ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கை மறுஆய்வு செய்யக்கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில், மூன்று பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் உள்பட 3 பேர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதித்ததோடு,
வருமான வரித்துறை முன் ஆஜராகவும் விலக்கு அளித்தது. மேலும், மனு தொடர்பாக  4 வாரத்தில் வருமானவரித்துறை பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!