சென்னை ரயில் நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு


 

நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். 

இந்நிலையில், குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில், தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கோயம்பேடு பேருந்து நிலையம் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!