மத்திய குழுவினரை முற்றுகையிட்ட விவசாயிகள்!

தமிழ்நாட்டில் இந்தாண்டு வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வறட்சி காரணமாக அதிக அளவிலான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். இதனிடையே, தமிழத்தில் ஏற்பட்ட வறட்சி நிலவரத்தை ஆய்வு செய்ய, மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தமிழகம் வந்து பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் வறட்சி நிலவரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தபோது, அதிகாரிகளை முற்றுகையிட்டு தங்களது பாதிப்புகளை குன்னத்தூர் பகுதி விவசாயிகள் கண்ணீர் மல்க எடுத்துரைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!