வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (25/01/2017)

கடைசி தொடர்பு:22:19 (25/01/2017)

மார்ச் 5-ல் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் மார்ச் 5-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் மாதம் 5-ம் தேதி நடைபெறும் என்றும், தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 கவுரவச் செயலாளர்கள், கவுரவப் பொருளாளர், 21 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுமென்றும் கூறியுள்ளார்.

தேர்தலை முன்னிட்டு, வரும் 27-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை வேட்பு மனுக்கள் வழங்கப்படுவதாகவும், வரும் 30-ம் தேதி முதல் அடுத்த பிப்ரவரி 4-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 4-ம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை, வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். 

பிப்ரவரி 8-ம் தேதி மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் கூறியுள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க