'தோழர்' என்ற வார்த்தைக்கு தா.பாண்டியன் புது விளக்கம்!

'' 'தோழர்' என்ற வார்த்தை சிங்காரவேலர் காலம்முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், சென்னையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்குள் நுழைந்த சமூக விரோதிகள் யார் என்பதை கமிஷனர் ஜார்ஜ்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

கோவை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் ஐ.பி.எஸ் படித்துள்ளாரா என்ற கேள்வி எழுகிறது என்று கூறிய தா.பாண்டியன், 'தோழர்' என்ற வார்த்தை சிங்காரவேலர் காலம்முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று புது விளக்கம் அளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!