கோயில் யானையை காட்டுக்கு அனுப்ப சொல்லவில்லை- பதறிய கிரண்பேடி

Kiran Bedi

பீட்டா புகாரின் பேரில் புதுச்சேரி மனக்குள விநாயகர் கோயில் யானையை காட்டுக்கு அனுப்ப சொல்லி புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டதாக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் புகார் எழுப்பினர். 

இந்நிலையில், 'விலங்குகள் நல வாரியம் கடந்த அக்டோபர் மாதம் யானை லட்சுமிக்கு அவசர சிகிச்சை தேவை என்று தெரிவித்தது. இந்த விஷயத்தை நான் அரசிடம் எடுத்துக் கூறினேன். அதன் பிறகு லட்சுமியைப் பற்றி தகவல் இல்லை. லட்சுமியை காட்டுக்கு அனுப்ப சொல்லவில்லை. நானும் லட்சுமியிடம் ஆசி பெற்றுள்ளேன்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆளுநர் கிரண்பேடி.

 

-ஜெ.முருகன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!