சென்னை தொழிலதிபர் வீட்டில் 100 பவுன் காெள்ளை

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 100 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாநகர் டபிள்யூ பிளாக் 5வது மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சிவராமகிருஷ்ணன். வீட்டின் மேல் மாடியில் வசித்து வரும் இவர், கீழ் தளத்தை அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். தொழிலதிபரான இவர், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.

இந்த நிலையில் இன்று வீடு திரும்பிய சிவராமகிருஷ்ணனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கீழ்தளத்தில் இருந்த பின்பக்க கதவை உடைத்து 100 பவுன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அண்ணாநகர் காவல்நிலையத்தில் சிவராமகிருஷ்ணன் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்.மகேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!