வெளியிடப்பட்ட நேரம்: 22:07 (27/01/2017)

கடைசி தொடர்பு:22:09 (27/01/2017)

மெரினாவில் போராட்டம் நடத்த காவல்துறை தடை!

Marina Beach

சென்னை மெரினாவில் இனி போராட்டம் நடத்த காவல்துறை தடை விதித்துள்ளது. அதன்படி, கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் , 'பொழுதுபோக்கிற்காக மெரினாவுக்கு அதிகளவு மக்கள் வருகின்றனர்.   குறிப்பிட்ட இடங்களில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி பெற வேண்டும். ஜனநாயக வழியில் போராட அனுமதி வழங்கப்படும்.  ஆனால், சட்டவிரோதமாக கூடினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் அமைதி நிலவ பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்' என்று காவல் துறை தெரிவித்துள்ளது.  முக்கிய இடங்களில் போராட்டம் நடத்த ஏற்கெனவே தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க