குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்!


 

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வற்றிக் கிடந்த நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இந்நிலையில், நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குற்றாலத்தின் பிரதான அருவியில் இன்றும் தண்ணீர் அதிகமாக விழுவதால், 2-வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

இதனிடையே, சிறிய அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

- ஆண்டனிராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!