காரைக்குடி அருகே மஞ்சுவிரட்டு!

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் பேராட்டம் நடத்தி வந்த நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு அவரசச் சட்டம் பிறப்பித்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சிவிரட்டு ஆகியவை நடைப்பெற்று வருகின்றனர். அதன்படி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் மஞ்சுவிரட்டு இன்று நடைபெற்றது. கொத்தமங்கலத்தில் ஊர் பொதுமக்கள் சேர்ந்து நடத்திய இந்த மஞ்சுவிரட்டியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்தன. இதில் மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கி மகிழ்ந்தனர். இதனிடையே இந்த மஞ்சுவிரட்டில், 5 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

- சாய்தமர்ராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!