முதல்வருடன் கி.வீரமணி திடீர் சந்திப்பு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி திடீரென சந்தித்துப் பேசினார். தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

தமிழக அரசு நீட் தேர்வு தொடர்பான புதிய சட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது தொடர்பாக திராவிட கழக தலைவர் வீரமணி முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "21 ஆண்டுக்கு மேலாக நுழைவு தேர்வு ஏழை மாணவர்களை பாதிக்கக்கூடிய வகையில் அமைந்திருந்தது. பல்வேறு கட்சிகள் எதிர்த்து வந்த இந்த நீட் தேர்வு தொடர்பாக, தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் மகிழ்ச்சியளிக்கிறது. இதே போல, மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை சட்டத்தின் மூலம் கொண்டு வர முற்படும்   சம்ஸ்கிருத மொழி தொடர்பாகவும், இந்த அரசு ஒரு திட்டவட்டமான முடிவை எடுக்க வேண்டும்.

இந்த சட்டம் பொதுபட்டியலில் இடம்பெற்றுள்ளதால், மத்திய அரசு இதனை மறுப்பதற்கு வாய்ப்பில்லை. மக்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது, அதனை தீர்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது" என்றும்  கூறினார்.

- தேவராஜன்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!