கடல் கழிவுகளை அகற்ற தன்னார்வலர்கள் தேவை... கை கோர்க்கலாமா இளைஞர்களே!? #ChennaiOilSpill #LetsCleanChennaiSea

 

கடந்த சனிக்கிழமை சென்னை, எண்ணூர் துறைமுகத்தின் அருகில் இரண்டு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகின. அப்போது ஒரு கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது. இதனால் மெரீனா வரையே கருப்பு நிறத்தில் கழிவுகள் கரை ஒதுங்கியிருக்கின்றன. 

கடலில் கொட்டிய எண்ணெய்... கருங்கடலாய் மாறிய துயரம்! - அதிர்ச்சி ஆல்பம் க்ளிக் செய்க...

இந்த கழிவுகளை அகற்றும் பணியில் அரசுடன்  கைகோத்து தன்னார்வ அமைப்புகளும் களம் இறங்கியிருக்கின்றன.

இன்றும்  (1-2-2017) சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தங்கள் பங்களிப்பு தர விரும்பும் தன்னார்வலர்கள் tree foundation அமைப்பை 9444052242 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவர்கள் இன்று இரவு வரை இந்தப் பணிகளை மேற்கொள்கிறார்கள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!