வெளியிடப்பட்ட நேரம்: 16:36 (03/02/2017)

கடைசி தொடர்பு:19:54 (03/02/2017)

பொதுமக்களுடன் அமர்ந்து சாப்பிட்ட முதல்வர் ஓ.பி.எஸ்.!

அண்ணா நினைவுநாள் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று, பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

அண்ணாவின் 48-வது நினைவு தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து இன்று நடைபெற்றது. சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று, பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.


சென்னை, அருள்மிகு ஸ்ரீகாளிகாம்பாள் கமடேஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நடைபெற்ற சமபந்தி விருந்து நிகழ்ச்சியில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பொதுமக்களுடன் உணவு அருந்தினார்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனும், நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கடேசபெருமாள் திருக்கோயிலில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜும், கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயிலி்ல் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியும், அமைந்தகரை ஏகாம்பரேசுவரர் கோயிலில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும், வில்லிவாக்கம் செளமிய தாமோதரப் பெருமாள் கோயிலில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணனும் சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க