எண்ணெய் கசிவு: ஸ்டாலின் நேரில் பார்வை!

Mk Stalin

கப்பல் விபத்து நடந்த எண்ணூர் கடல் பகுதியில் திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

அங்கு மீனவ குடும்பங்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எண்ணெய் கசிவால் மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக நிபுணர்குழு அமைத்து இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் மீனவர்களுக்கு இடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கும், மீனவர்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் இந்த வழக்கை நடத்த வேண்டும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!