கப்பல் விபத்து: விசாரணைக் குழு அமைப்பு!

Minister Pon Radhakrishnan

எண்ணூரில் எண்ணெய்க் கசிவு அகற்றும் பணியை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், 'கப்பல் விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு கப்பல்களும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 12 கி.மீ தூரத்துக்கு எண்ணெய் படலம் அகற்றப்பட்டுள்ளது. எவ்வளவு எண்ணெய் கசிந்தது என்பதை தோராயமாக கூற முடியாது.

கடலில் கலந்துள்ளது கச்சா எண்ணெய் அல்ல. அது கப்பலின் எரிபொருள். எண்ணெய் கழிவுகளை அகற்ற மனிதர்களுடன் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. கரையோரங்களில் உள்ள கழிவுகளை இயந்திரங்களால் அகற்ற முடியாத சூழல் நிலவுகிறது' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!