வெளியிடப்பட்ட நேரம்: 08:48 (05/02/2017)

கடைசி தொடர்பு:09:34 (05/02/2017)

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு... சீறிப்பாய்ந்த காளைகள்!

 

 

ஜல்லிக்கட்டு மீது நீடித்து வந்த தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று மதுரை மாவட்ட அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில், அவனியாபுரத்தில் காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

900 காளைகள் இன்று வாடிவாசலில் இருந்து சீறிப்பாய உள்ளன. 750 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க முயல்வர். மாடுகளுக்கும், கலந்து கொள்ளும் வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. அதன் பின்பே ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

அமைச்சர் உதயகுமார் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார். முதலில் 4 கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பின் ஜல்லிக்கட்டு காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன. காளைகளின் திமிலைப் பிடித்து அதை அடக்க மாடுபிடி வீரர்கள் முயன்று வருகின்றனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க