காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி மேலும் ஒரு தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு

காஷ்மீர் மாநிலம் சம்பா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மேலும் ஒரு தமிழக ராணுவ வீரர் உயிரிந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள ஏ.புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் திருப்பாண்டி(33). காஷ்மீரின் சம்பா பகுதியில் கூடாரம் அமைத்து பாதுகாப்புப் பணியில் ராணுவ வீரர்கள் ஐந்து பேர் ஈடுபட்டிருந்தனர். நேற்றிரவு திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் கூடாரம் சேதமடைந்தது.

இதில் இரும்புக் கம்பி திருப்பாண்டியின் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்தார். மற்ற நான்கு வீரர்களும் காயத்துடன் உயிர் தப்பினர். இறந்த திருப்பாண்டிக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருக்கின்றனர். திருப்பாண்டியின் மறைவால் ஏ.புனவாசல் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

- இரா.மோகன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!