தமிழகத்தின் வரலாறை நினைத்து மு.க.ஸ்டாலின் வேதனை

MK Stalin

ஒரு ஓட்டுக்கு, மூன்று முதல்வர்களைச் சந்தித்த வரலாறு தமிழகத்தையே சேரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'ஒரு ஓட்டுக்கு, மூன்று முதல்வர்களைச் சந்தித்த வரலாறு தமிழகத்தையே சேரும். சொத்துக் குவிப்பு மேல்முறையீடு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வர உள்ளது. அதன்பிறகு, பன்னீர்செல்வம் மீண்டும் தமிழக முதல்வராவார். முதல்வர் பதவிக்கு நடக்கும் போட்டி கேலிக்கூத்தாக உள்ளது. அதிமுக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து, தள்ளிவைக்க எடுக்கும் நடவடிக்கை, அதன் பயத்தை காட்டுகிறது' என்றார்.

இதனிடையே, திருவாரூரில் இன்று செய்தியாளர்களிம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மக்களின் கருத்துகளுக்கு நேர்மாறாக அதிமுக எம்எல்ஏக்கள் செயல்பட்டுள்ளனர் என்றார்.

மேலும், நந்தினி வழக்கில் காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!