வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (06/02/2017)

கடைசி தொடர்பு:15:18 (06/02/2017)

ஜெயலலிதா படத்தை ஏன் வெளியிட வில்லை? ரிச்சர்ட் பீலே பதில்

ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஏன் வெளியிட வில்லை என்ற கேள்விக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே பதில் அளித்துள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், “முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாகவே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருந்தது. உடல் பரிசோதனையில் நோய் தாெற்றால் கடுமையாக ஜெயலலிதா பாதிக்கப்பட்டிருந்தார்.

நோய் தொற்றுக்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்தோம். ஜெயலலிதாவின் இதயம், நுரையீரலில் நோய்தொற்று அதிகமாக இருந்தது. மருத்துவ முறைகளுக்குட்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டிரக்கியோஸ்டோமி செய்தபின் சுயநினைவு திரும்பியது.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஜெயலலிதா உணர்ந்தார். நோயாளியின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. கைரேகை வைத்தபோது ஜெயலலிதா பேசினார்” என்று கூறினார்.

படம்: கே.ஜெரோம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க