ஜெயலலிதா கால் அகற்றப்பட்டதா? ரிச்சர்ட் பீலே பதில்

ஜெயலலிதா கால் அகற்றப்பட்டதா என்பது குறித்த கேள்விக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே பதில் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரிச்சர்ட் பீலே, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி தெரிவிக்கப்பட்டது. தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளரிடமும் விளக்கினோம். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையின் கண்ணாடி வழியாக ஆளுநர் அவரை பார்த்தார். சிகிச்சை முறைகள் குறித்து ஆளுநருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இரண்டாவது முறை ஆளுநர் வந்தபோது ஜெயலலிதாவை பார்க்கவில்லை.

ஜெயலலிதாவின் கால் உள்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை. அவருக்கு எந்த உறுப்புமாற்று அறுவைசிகிச்சையும் செய்யப்படவில்லை. எங்களிடம் ஜெயலலிதா சைகை செய்தார். சிகிச்சை அறையில் ஜெயலலிதா சில அடி தூரம் நடந்தார். நோயாளிக்கு பிரச்னை என்றால் முதலில் மருத்துவர்தான் கவலைப்படுவார். கையில் வீக்கம் இருந்ததால் அவர் கைரேகை வைத்தார். எதிர்பாராதபோது திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டதால் உடல்நிலை முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது. ஜெயலலிதாவுக்கான சிகிச்சை அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. எனது குடும்பத்தைப் பற்றி ஜெயலலிதா விசாரித்தார். ஜெயலலிதாவிடம் நான் நேரடியாக பேசினேன். உணவை பற்றியும், எனது குழந்தைகளை பற்றியும் ஜெயலலிதாவிடம் பேசினேன். சிகிச்சை முறை பற்றி சசிகலாவிடம் தினமும் விளக்கினோம். பிசியோதெரபி சிகிச்சைக்கு ஜெயலலிதா ஒத்துழைத்தார்.

சசிகலாவைத் தவிர ஜெயலலிதாவின் உறவினர்களும் அவரிடம் பேசினர்.  அருகில் இருந்தவர்கள் பற்றி ஜெயலலிதா அதிகம் அறியவில்லை. உயர் சிகிச்சைக்காக லண்டனுக்கு கொண்டு செல்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனால் உலகத்தரமான சிகிச்சை அப்போலோவில் இருந்ததால் லண்டன் செல்லவில்லை. சிறந்த மருத்துவக்குழுவினர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். அதிநவீன சோதனைகள் மூலம் பிரச்னைகள் கண்டறிந்து சிகிச்சை அளித்தோம். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது டாக்டர்கள் இருந்தனர். ஜெயலலிதாவால் பேச முடிந்தது. ஆனால், தெளிவாக அவரால் பேசமுடியவில்லை என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!