கட் அவுட் வைத்தவர்களை காய்ச்சி எடுத்த விவேக் ஜெயராமன்!

Vivek

சென்னை, பல்லாவரம் கன்டோன்மென்ட் திருமண மண்டபத்தில் நடந்த சங்கர் - பிரியதர்ஷினி திருமண விழாவுக்கு இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். இதற்காக மணமக்கள் குடும்பத்தினர், நண்பர்கள் பெயரில் விமான நிலையம் செல்லும் வழி முழுக்க விவேக் ஜெயராமனை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து நம் விகடன்.காமில் எழுதி இருந்தோம். 

இந்நிலையில் இன்று மதியம் விவேக் ஜெயராமனுக்காக வைக்கப்பட்டிருந்த அத்தனை பேனர்களும் கழற்றி எடுக்கப்பட்டன.

லீ ராயல் மெரிடியன் ஹோட்டல் வாசலில் விவேக் பேனரை அகற்றிக் கொண்டிருந்த சிலரிடம் நமது நிருபர் பேசினார். "இன்னும் பத்து நிமிஷத்துக்குள்ள அத்தனை பேனரையும் ரிமூவ் பண்ணனும்னு விவேக் சார் சொல்லிட்டார். அவரோட கல்யாணத்துக்கே இப்படி யாரையும் பேனர் வைக்க அவர் அனுமதி கொடுக்கலையாம். அப்படியிருக்க யார் இப்படி பேனர் வைக்கச் சொன்னதுன்னு எல்லாரையும் போட்டு காய்ச்சி எடுத்திட்டார். இனி ஒருபோதும் யாரும் இப்படி என் பெயர் போட்டு பேனர் வைக்கக் கூடாதுன்னு சொல்லி, அவரோட செலவிலேயே எல்லா பேனரையும் எடுக்கச் சொல்லிட்டார்" என்றார்கள் பேனரை அகற்றியபடி. 

Vivek
 

தனக்காக முக்கிய இடங்களில் ப்ளக்ஸ், பேனர்கள் வைக்காதீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கும் நிலையில் ஆளும் கட்சியின் முக்கிய வாரிசான விவேக் அவருக்கு வைக்கப்பட்ட பேனரை அவரே ஆள் வைத்து அகற்றி இருப்பது அரசியலில் நல்ல மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!