வெளியிடப்பட்ட நேரம்: 19:44 (06/02/2017)

கடைசி தொடர்பு:20:37 (06/02/2017)

தமிழகத்தில் மதுவிலக்கு எப்போது? நீதிமன்றம் கேள்வி

மதுரை உயர் நீதி மன்றம்

மது போதையில், தாயைக் கொலை செய்த ஒருவர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தினசரி கூலிகள் மது வாங்குவதற்காகத் தினமும் 50 சதவீதம் செலவு செய்வதால், பலரது குடும்பம் வறுமையில் வாடுவதாகக் குறிப்பிட்டார். மேலும், நீதிமன்றங்களில் மது பாதிப்பு தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என மத்திய மாநில அரசுகள் பதிலளிக்குமாறு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கு விசாரணையை வருகிற 24-ம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க