Published:Updated:

`குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தை; தாயாக மாறிய பெண்கள்!’ -நெகிழவைத்த ஜோலார்பேட்டை

குப்பைத் தொட்டியில், பெண் குழந்தையை வீசிச்சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடிவருகிறார்கள்.

குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தை
குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தை

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலைய சந்திப்பு அருகில் உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து இன்று விடியற்காலை 5 மணியளவில் குழந்தை அழுகின்ற சத்தம் கேட்டுள்ளது.

பெண் குழந்தை
பெண் குழந்தை

அங்கிருந்த பொதுமக்கள் சிலர் சந்தேகமடைந்து குப்பைத் தொட்டிக்குள் எட்டிப் பார்த்துள்ளனர். அதில், பிறந்து 8 மாதமே ஆன பெண் குழந்தை அழுதுகொண்டிருந்தது.

குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த குழந்தையை மீட்ட பெண்களில் சிலர் விளையாட்டு காட்டி அழுகையை நிறுத்தினர். பின்னர், பசியால் துடித்த குழந்தைக்கு அருகிலிருந்த டீக்கடையிலிருந்து பால், பிஸ்கட் வாங்கிவந்து ஊட்டினர். 

பசியாற்றும் பெண்கள்
பசியாற்றும் பெண்கள்

இதுபற்றி ஜோலார்பேட்டை காவல் துறையினருக்கும் உடனடியாக தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்துவந்து குழந்தையை மீட்டுத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று அனுமதித்தனர். 

தற்போது, குழந்தையின் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறது. `குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியவர்கள் யார்.. பெண் குழந்தை வேண்டாமென்று வீசிச் சென்றார்களா?' என்பது குறித்துப் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

கடந்த மாதம் குடியாத்தம் ஏரிப் பகுதியில் வீசப்பட்டுக் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. இதுபோன்று குழந்தைகளை வீசிச் செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.