Published:Updated:

`பள்ளிக்காக சேமிச்சது; ஆனா இப்ப கொரோனா நிதிக்கு கொடுத்துட்டேன்!'- 8 வயது சிறுமியின் நெகிழ்ச்சி செயல்

உண்டியல் சேமிப்பை அரசுக்கு வழங்கிய சிறுமி
உண்டியல் சேமிப்பை அரசுக்கு வழங்கிய சிறுமி

``என்னோட சேமிப்புப் பணத்தில் ஸ்கூலுக்கு ஆர்.ஓ மெஷின் வாங்கிக்கொடுக்கலாமான்னு கேட்டா. அதை வாங்கப் போதுமான பணம் இப்போதைக்கு உண்டியல்ல இருக்காதுனு சொன்னேன். அந்தப் பணத்தை கொரோனா நிவாரணத்துக்குக் கொடுத்துட்டா!''

முதல் அலை, இரண்டாவது அலை எனப் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்கள் பலரும் தங்களால் இயன்ற நிதியைக் கொரோனா நிவாரண நிதியாகக் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, சிறுவர்கள் பலரும் தங்களுடைய உண்டியல் சேமிப்புப் பணத்தைக் கொடுத்து நெகிழ வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி சீர்த்தி கண்ணம்மா (8), மூன்று வருடங்களுக்கும் மேலாகத் தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணமான ரூ.1,280-ஐ முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் அளித்தார். நிவாரண நிதி அளித்த சிறுமிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தாயுடன் சிறுமி
தாயுடன் சிறுமி
விழுப்புரம்:ரூ.51,000 கொரோனா நிவாரண நிதி!-மணக்கோலத்தில் அமைச்சரைச் சந்தித்து வழங்கிய புதுமணத் தம்பதி

சிறுமி சீர்த்தி கண்ணம்மாவிடம் பேசினோம்.

``ஸ்கூல்ல ஆர்.ஓ வாட்டர் மெஷின் வைக்கிறதுக்காக, காசு சேமிச்சேன். அதுக்கு இடையில இந்தக் கொரோனா லாக்டௌன் வந்திருச்சு. எல்லாரும் கஷ்டப்படுறாங்க. அதனால, கொரோனா நிவராணத்துக்காக உண்டியலைக் கொடுத்திட்டேன்" என்கிறார் மழலைக் குரலில்.

சீர்த்தி கண்ணம்மாவின் அம்மா ஓவியாவிடம் பேசினோம். ``சேமிப்புப் பழக்கம் கண்ணம்மாவுக்கு என்கிட்ட இருந்து வந்ததுதான். 4 வயசு இருக்கும்போதே அவளுக்கு உண்டியல் வாங்கிக்கொடுத்திட்டேன். பொதுவா நான் காசு கொடுக்க மாட்டேன். பிஸ்கட்டோ, மிட்டாயோ தேவையானதை வாங்கிக் கொடுத்திடுவேன். ஆனா, அவங்க அப்பாதான் காசு கொடுப்பாரு. அம்மாச்சி, பெரியம்மான்னு வீட்டுக்கு வர்றவங்க எல்லாரும் காசு கொடுப்பாங்க.

ஆனா, பாப்பா அதை மிட்டாய் வாங்கி எல்லாம் செலவழிக்காது. கொடுக்கிறவங்ககிட்டயும், உண்டியல்லதான் அதை போடப்போறதைச் சொல்லிடும். போன வருஷம், அவங்க பள்ளிக்கு பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்துக்குப் போயிருந்தப்ப, அங்க இருந்த ஆர்.ஓ வாட்டர் மெஷின் பழுதாகிக் கிடப்பது தெரியவந்துச்சு. அது யாரோ ஒருத்தர் ஸ்பான்ஸர் கொடுத்ததாம். கூட்டம் முடிஞ்சு கிளம்பும்போது அவங்க டீச்சர் வந்து, `இதை இலவசமா சரி பண்ணிக்கொடுக்க யாராவது ஆள் இருக்காங்களா?'னு கேட்டாங்க. அவங்க சொன்னதைப் பக்கத்துல இருந்து கேட்டுக்கிட்டிருந்த கண்ணம்மா, `என்னோட சேமிப்புப் பணத்தை இதுக்குக் கொடுக்கலாமா அம்மா...'ன்னு கேட்டா.

உண்டியல் சேமிப்பை அரசுக்கு வழங்கிய சிறுமி
உண்டியல் சேமிப்பை அரசுக்கு வழங்கிய சிறுமி
மகன் படிப்புக்காக வளர்த்த கன்றுகளை விற்று கொரோனா நிவாரண நிதியளித்த மாற்றுத்திறனாளி!

எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. `இப்போதைக்கு அதை வாங்கப் போதுமான பணம் உண்டியல்ல இருக்காது. இன்னும் கொஞ்சம் சேமிச்ச பிறகு நாம வாங்கிக் கொடுப்போம்'னு சொன்னேன். அதுக்கு அப்புறம், அதுக்காகவே சேமிக்க ஆரம்பிச்சா. ஓரளவுக்கு பணம் சேர்ந்திடுச்சு.

இதற்கிடையில, இப்போ கொரோனா நிவாரண நிதிக்கு பிள்ளைங்க எல்லாம் சேமிப்புப் பணத்தைக் கொடுத்திட்டு வர்றாங்க. இது பத்தி டிவியில பார்த்த கண்ணம்மா, `இப்ப தான் ஸ்கூல் எல்லாம் திறக்கலையே, அதனால, கொரோனா நிவாரணத்துக்கு இந்தப் பணத்தைக் கொடுத்திடலாமா?'னு கேட்க, எங்களுக்கு சர்ப்ரைஸ். சந்தோஷமா ஓ.கே சொல்லி, இப்போ கண்ணம்மாவுக்கு இன்னொரு உண்டியலையும் வாங்கிக்கொடுத்தாச்சு" என்றார் பெருமையுடன்.

அடுத்த கட்டுரைக்கு