”கீழே விழுந்த ஜெயலலிதா...” : பி.எச்.பாண்டியன்

Pandiyan

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் ,’ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதை ஊடகங்களில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு, ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. பிரச்னை முடிவில், கீழே விழுந்த ஜெயலலிதாவைத் தாங்கிப்பிடிக்கக்கூட யாரும் இல்லை. இந்த நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். சசிகலா மற்றும் குடும்பத்தினர் முகத்தில் கொஞ்சம்கூட வருத்தம் இல்லை. கடந்த 2 நாட்களில் நடந்த நிகழ்வுகள் எனது மவுனத்தைக் கலைத்துவிட்டன’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!