கார்டனில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? பி.எச்.பாண்டியன் சந்தேகம்

ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் நடந்ததாகத் தகவல் வெளியானது என்றும், அதனால் வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் என்னென்ன என்பவை குறித்த சந்தேகம் ஏற்படுகிறது என்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் கூறினார்.

சென்னை அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று பி.எச். பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நினைவிழந்த நிலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்குப் பல்வேறு வகையான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.

அரவக்குறிச்சித் தேர்தல் பிரசாரத்துக்கு ஜெயலலிதா போகப்போவதாகவும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தார்கள். மருத்துவமனையில் நன்றாக இருந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். ஆனால் முதல்வராக ஜெயலலிதாவின் மறைவு பேரிழப்பாக அமைந்துவிட்டது.

ஆனால், கடந்த 2 நாள்கள் நடந்த நிகழ்வுகள் எனது மவுனத்தைக் கலைத்துவிட்டன. ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் நடந்ததாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

அதனால், வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் என்னென்ன என்பவை குறித்த சந்தேகம் ஏற்படுகிறது. போயஸ் தோட்ட இல்லத்தில் கீழே விழுந்த ஜெயலலிதா, தனக்கு உதவும்படி கோரினாரா?

ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தபோது மெய்க்காப்பாளர்கள்தாம் பேசினர் என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!