தமிழகம் முழுவதும் சி.பி.எம் மறியல்! ஜி.ராமகிருஷ்ணன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது | CPM stages protest in various places across Tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (07/02/2017)

கடைசி தொடர்பு:17:15 (07/02/2017)

தமிழகம் முழுவதும் சி.பி.எம் மறியல்! ஜி.ராமகிருஷ்ணன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது

மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்தும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. பல்வேறு இடங்களில் நடக்கும் இந்த மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்றனர். சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் நடைபெற்ற மறியல் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார்.


நெல்லை

Communist protest


நெல்லை மாவட்டத்தில் 14 இடங்களில் சி.பி.எம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, நெல்லை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர். 
-ஆண்டனிராஜ்


மதுரை

Communist protest at Madurai


'மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத ஆட்சி நடத்துகின்றன' என்று கூறி சி.பி.எம் சார்பாக இன்று மதுரையில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை  கருமலையான் தலைமையில் முற்றுகையிட வந்த 350 பேர் கைது செய்யப்பட்டனர்.

செ.சல்மான்

படம்: வீ.சதீஷ்குமார்


ராமநாதபுரம்

Communist protest at Ramanathapuram


வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாக்கக் வலியுறுத்தியும், செல்லாத நோட்டு அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை களையக் கோரியும் ராமநாதபுரத்தில்  மறியல் போராட்டம் நடந்தது. ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட 10 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

இரா.மோகன்


நாகர்கோவில்

Coomunist protest at Nagerkoil


நாகர்கோவிலில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.ஆர் உட்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். 

-ராம்குமார்

 

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பபூண்டி உள்ளிட்ட பத்து இடங்களில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது, வறட்சி காரணமாக உயிரிழந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் ஏக்கர் ஒன்று ரூ.5465 அறிவித்திருப்பது போதாதது என்றும், அதற்குப் பதிலாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். மேலும், வறட்சி காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக, வேலையில்லாமல் இருக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

- க.சதீஷ்குமார்
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க