வெளியிடப்பட்ட நேரம்: 15:18 (07/02/2017)

கடைசி தொடர்பு:15:16 (08/02/2017)

அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி! பண்ருட்டி ராமச்சந்திரன்

ADMK Press meet

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் மூத்த நிர்வாகிகளான பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், 'தேவையில்லாமல் வேண்டுமென்றே சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்டுப்பாடுடன் இயங்கி வருகிறது. ஆனால், சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். கட்சி மீது அவதூறு பேசுபவர்களை அடையாளம் காட்டவே இந்த செய்தியாளர்கள் சந்திப்பு' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க