வெளியிடப்பட்ட நேரம்: 18:48 (07/02/2017)

கடைசி தொடர்பு:18:56 (07/02/2017)

தீபா அணியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்! பின்னணியில் தி.மு.க.?!

                                                ராஜ கண்ணப்பன்

.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் 80 பேர் வரையில் தீபா ஆதரவு நிலை எடுத்திருப்பதாக வெளியான தகவல்களால் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் அவசரக் கூட்டம், மீண்டும் நடக்கும் எனத் தெரிகிறது. தீபா அணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் சென்றாலும், தீபாவைப் பொறுத்தவரையில் தனிக்கட்சி என்ற எண்ணத்தில் இல்லை என்றே சொல்லப்படுகிறது. "அ.தி.மு.க தலைமைப் பொறுப்பை ஏற்பேனே தவிர புதிய கட்சியைத் தொடங்க மாட்டேன்" என்று தன் நட்பு வட்டங்களில் தீபா தெளிவாகச் சொல்லி வருகிறார். அதே வேளையில் தி.மு.க-வில் ஸ்டாலினுக்கு நெருக்கமான மூத்த  தி.மு.க எம்.எல்.ஏ-க்களை தொடர்பு கொண்டு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பேசிவருகின்றனர் என்ற தகவலும் உள்ளது.                    

'எது நடந்தாலும், யார் வந்து நம்மிடம் பேசினாலும், ஆதரவு கொடுத்தாலும் எல்லாமே வெளிப்படையாக இருக்கட்டும், யாரும், யாரிடமும் ரகசியம் பேசிக் கொண்டிருக்க  வேண்டாம்' என்று ஸ்டாலின் தன்னுடைய சகாக்களிடம் சொல்லி விட்டாராம். ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவர் கணவர் நடராஜன் ஆகியோரின் செல்லப் பிள்ளையாக தீபக் இருக்க,  தீபா மட்டுமே சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து வருகிறார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ரத்த உறவு கொண்ட தீபாவுக்கு, ஜெயலலிதா இறப்புக்கு முன் தினம்  டிசம்பர் 4-ம்தேதி வரை  அப்போலோவுக்குள்  அனுமதி மறுத்ததற்கு  தீபாவின் எதிர்ப்பு நிலைதான் காரணம் என்கிறார்கள் .

ஸ்டாலின் திமுக

சென்னை தி.நகரில் 'மக்களால் நான், மக்களுக்காக நான்' என்ற அறைகூவலுடன்  தீபா காட்டியுள்ள சிக்னல், தொண்டர்களை அந்த வீட்டை நோக்கி நகரவைத்துள்ளது. அன்றாடம் ஆயிரம் தொண்டர்களாவது தீபாவைத் தேடி, தி.நகருக்கு வருகின்றனர். 
தேடிவருபவர்களை மாலை வேளையில் பால்கனியில் நின்றபடி பார்த்து  கையசைப்பதை, கடந்த 60 நாட்களாக  தீபா வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 'சசிகலா முதல்வராவதை ஏற்கமுடியாது,  இரண்டுமாதம் கழித்து அப்போலோ அளிக்கும் மருத்துவ விளக்கம் ஏற்கமுடியாது' என்று தீபா பதிலடி கொடுத்து வருகிறார்....ஜெயலலிதா அமைச்சரவையில் மந்திரியாக கோலோச்சிய ராஜ கண்ணப்பன் கடந்த 6-ம்தேதி பிற்பகல் தீபாவை நேரில் சந்தித்து  விவாதித்துள்ளார். 'எல்லா வகையிலும் உறுதியுடன் துணை நிற்பதாக' கண்ணப்பன் அப்போது வாக்குறுதி கொடுத்துள்ளார் என்று தீபா  ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தீபா - கண்ணப்பன் சந்திப்பு நிகழ்ந்த அடுத்த நாளே பி.ஹெச்.பாண்டியனும், அவர் மகன் மனோஜ்பாண்டியனும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து ' ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது' என்பதில் தொடங்கி சசிகலாவுக்கு எதிராக விமர்சனங்களை வைத்துள்ளனர். கே.பி.முனுசாமி மட்டுமே நேற்றுவரையில்  சசிகலாவுக்கு எதிராகக் குரல் கொடுத்துவந்தார். இன்று முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனும், அவருடைய மகன் மனோஜ்பாண்டியனும்  சசிகலா எதிர்ப்பு நிலையை வெளிப்படையாகக் காட்டத் தொடங்கியுள்ளனர். கண்ணப்பன் வருகைக்குப் பின்னர்தான் தீபாவுக்கு  80 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அண்மையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்ற எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகளை  'துல்லியமாக' கவனிக்கும் வேலை(?)யையும் தொடங்கி விட்டார்களாம்.

தமிழக அரசில் உயர்பொறுப்புகளை வகித்து வந்த அதிகாரிகள் ஒவ்வொருவராக 'சொந்தக் காரணமாக பதவியில் இருந்து விலகுகிறேன்' என்று சொல்லிக் கொள்வது, லேசில் கடந்து போகிற செய்தியல்ல.. இனி, எம்.எல்.ஏ-க்களை பாதுகாத்து வைக்க எந்தெந்த ஊர்களுக்கு டிக்கெட் போடப் போகிறார்களோ தெரியவில்லை.

 - ந.பா.சேதுராமன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்