பெரும்பான்மை பலம் நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்! - முத்தரசன்

 

முத்தரசன்

மிழக முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய நிர்பந்தப்படுத்தப்பட்டேன். அதிமுக அமைச்சர்களாலே அவமானப்படுத்தப்பட்டேன். எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என ஓ.பன்னீர்செல்வம்  மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் பேட்டி அளித்து பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் பேட்டி குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பல்வேறு கருத்துகளைக் கூறிவருகின்றனர். இந்நிலையில் அதிமுக-வில் பிளவு ஏற்பட்டு இருப்பது தெரிகிறது. இதனால் சட்டசபையில் அதிமுக தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தமிழக ஆளுநர்(பொறுப்பு) வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!