வெளியிடப்பட்ட நேரம்: 00:08 (08/02/2017)

கடைசி தொடர்பு:11:25 (09/02/2017)

ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக களத்தில் மு.க.ஸ்டாலின்


தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்கள்  சந்தித்து அதிரடியாக பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பன்னீர்செல்வம் பேசியது  குறித்து ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

'முதல்வர் பன்னீர்செல்வத்தை சசிகலா செயல்படவிடாமல் தடுத்துள்ளார். மேலும் தன்னையே மிரட்டி ராஜினாமாக் கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த முதல்வருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். கவர்னர்  தலையிட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல பன்னீர் செல்வம் தலைமையில் அமைந்துள்ள ஆட்சி நடைபெற்ற மக்கள் நலப் பணிகளை  ஆதரித்தோம். மக்களுக்கு ஆதரவான பணிகளுக்கு எப்போதும் திமுக துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க