அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கம் | CM O.Panneer selvam removed from AIADMK treasurer

வெளியிடப்பட்ட நேரம்: 00:36 (08/02/2017)

கடைசி தொடர்பு:11:25 (09/02/2017)

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கம்

o.panneer selvam

அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா. அந்தப் பதவிக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வத்தின் பேட்டியைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளை சசிகலா போயஸ் கார்டனில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக பொருளாளராக சுமார் 15 வருடங்களுக்கு மேல் பதவி வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க