வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (08/02/2017)

கடைசி தொடர்பு:11:45 (09/02/2017)

சசிகலா முதல்வராகத் தாமதமானால்..! சு.சுவாமி எச்சரிக்கை

தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ‘சசிகலா கண்டிப்பாக முதல்வராக பதவி ஏற்க வேண்டும். அவ்வாறு நடக்காமல் தாமதமானால் அது அரசியலமைப்பிற்கு எதிரான வன்முறை. இந்த பிரச்னையில் பிரதமர் தலையிட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், ’தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அரசியல் பிரச்னைகளில் மத்திய அரசு தலையிட முடியாது. தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்டமுறைகளை ஆராய்ந்து தக்க முடிவு எடுப்பார். யாரைப்- பற்றியும் விமர்சிக்க விருப்பமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழிசை இந்தப் பிரச்னை பற்றி பேசுகையில், ’தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். பா.ஜ.க.வின் ஆதரவு தமிழக மக்களுக்குத்தான்’ என்று கூறியுள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க