வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (08/02/2017)

கடைசி தொடர்பு:14:10 (08/02/2017)

திருச்சியில் முதல்வர் பன்னீர்செல்வம் உருவ பொம்மை எரிப்பு..!

OPS effigy burned

திருச்சியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பு ஒத்தக்கடை செந்தில், இராஜராஜசோழன் ஆகியோர் தலைமையிலான அ.தி.மு.க தொண்டர்கள், கட்சிக்கு துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சாட்டி, முதல்வர் பன்னீர்செல்வம் உருவ பொம்மையை எரித்தனர். அதை தடுக்க முயன்ற காவல் துறையினரிடம் தள்ளுமுள்ளு எற்படவே, போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

-சி.ய.ஆனந்தகுமார்

படங்கள் : என்.ஜி.மணிகண்டன்

கடலாடியில்,

OPS effigy burned at kadaladi

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் அ.தி.மு.க ஒன்றிய கழகச் செயலாளர் முனியசாமி பாண்டியன் தலைமையிலான அ.தி.மு.க-வினர் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உருவ பொம்மையை எரித்தனர். அதன் பிறகு அவர்கள், பன்னீர்செல்வத்துக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். 

-இரா.மோகன்

மதுரை-மேலூர்,

OPS effigy burned

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையத்தில் தி.மு.க-வின் கைக்கூலி, அ.தி.மு.க-வின் துரோகி என கோஷமிட்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இதில் மேலூர் நகர் மன்றத் தலைவர் சரவணன் மற்றும் மேலூர் நகர் அ.தி.மு.க வினர் கலந்துகொண்டனர். 

-சே.சின்னதுரை

நீங்க எப்படி பீல் பண்றீங்க