சசிகலாவைப் பொதுச்செயலாளராக நியமிக்கவே வழியில்லையாம்!

Sasikala

இடைக்கால பொதுச் செயலாளரை நியமிக்கும் விதிகள் அ.தி.மு.க. சட்டவிதியில் இல்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்து வருகின்றன. தற்போதுள்ள சட்டவிதிகளை மாற்றினால் மட்டுமே சசிகலா தற்காலிக பொதுச் செயலாளர் ஆக முடியுமாம். இத்தகவல் உண்மையாக இருப்பின் சசிகலாவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவி செல்லாது எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா புஷ்பா உள்ளிட்ட சிலர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகார் குறித்து தேர்தல் ஆணையம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்வாறான செய்திகள் பரவி வருகின்றன.

இது குறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ’அதிமுக பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பான நகல் தமிழில் உள்ளதால், மொழிபெயர்ப்பு செய்து அனுப்புமாறு அதிமுக அலுவலகத்துக்குத் திருப்பி அனுப்பினோம். ஆனால் அதிமுகவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. மேலும் சசிகலா புஷ்பா புகார் குறித்தும் விளக்கம் கேட்டு அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அதற்கும் பதில் இல்லை’ என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!